ரகசிய ரிப்போர்ட் :109 தொகுதிகள்! திமுக - வில் பரபரப்பு?

TN Pre Exit Poll Results 

ரகசிய ரிப்போர்ட் :109 தொகுதிகள்! திமுக - வில் பரபரப்பு?


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ள நிலையில் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலையே காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகளே பதிவாகியுள்ளது.

 இது திமுக மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக - வின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் பதிவான வாக்குகள் 59.06% மட்டுமே. 

உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதியில் 58.41% சதவிகிதமும், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதியில் 60.52% சதவிகித வாக்குகளே பதிவாகியுள்ளது.

இது திமுக தலைவர் ஸ்டாலின் அவரது கட்சி வட்டாரங்களில் பெரும் அச்சதை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஐ - பேக் நிறுவனத்திற்கு சென்று கல நிலவரங்களை பிரசாந்த் கிஷோரிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான சில ஆய்வு குழு கல நிலவரங்களை ஆராய்ந்ததில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 109 தொகுதிகளில் உறுதியாக வெற்றிபெறும் என்று கூறியுள்ளனர்.

56 தொகுதிகள் இழுபறியில் நீடிப்பதாக கணிக்கமுடியாத அளவிற்கு உள்ளதாக கூறியுள்ளனர். 

இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அந்த 56 தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களை அழைத்து வாக்குபதிவு நாளில் ஏற்பட்ட நிகழ்வுகளை கேட்டறிந்து வருகிறார்.

இது திமுகவினர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments