முதல்வருடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்?

முதல்வருடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! 

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின் சொந்த ஊரான சிலுவம்பாலையதில் ஒரு சில அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக - விற்கு சாதகமாக வந்த நிலையில் , சமூக வலைதளங்களிலl 2021 இல் திமுக ஆட்சியை கைப்பற்றும் என்று வைரல்- ஆக பரவி வருகிறது.

இந்நிலையில் அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை - யில் கருத்துக்கணிப்பு முடிவுகளை எல்லாம் குப்பையில் போடுங்கள் என்றும் , மே 2 ஆம் தேதிக்கு பிறகு 100 ஜெயலலிதாவை அரசு அதிகாரிகள்,மற்றும் அதிமுக நிர்வாகிகள் பார்ப்பார்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.


அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அதிமுக 130 தொகுதிகளில் தனித்து வெற்றி பெரும் என்றும் கூறியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள்,கே. ஏ.செங்கோட்டையன்,எஸ்.பி.வேலுமணி,கருப்பண்ணன், பி.தங்கமணி,வெல்லமண்டி நடராஜன்,விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments