அரசியலில் அதிரடி காட்டும் சசிகலா..!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் டி.டி. வி. தினகரன் உட்பட அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நபர் சசிகலா.
ஆனாால் அவரோ தற்போதைய அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பெங்களூர் சிறையில் இருந்து வந்த போது தொலைகாட்சி நிரூபர் கேட்ட கேள்விக்கு தீவிரமான அரசியலில் ஈடுபடுவேன் என்று அதிரடியாக கூறினார்.
அதிமுக வையும் மீட்டு எடுப்பார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முதல் அவர் கட்சியின் உறுப்பினர்கள்,ஏன் அதிமுக வின் முக்கியமான நபர்கள் வரை எதிர்பார்த்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை உச்சம் அடைந்து மக்கள் அனைவரிடமும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சசிகலா மற்றும் அதிமுக நிர்வாகி இருவரின் தொலைபேசி உரையாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் கட்சியில் ஏற்பட்ட சிக்கல்களை (அதிமுக கட்சியில்)
சரி செய்து விடலாம் என்றும், சீக்கிரம் அரசியலில் வருவேன் என்றும் அந்த உரையாடலில் கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழக அரசியலில் மீண்டும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments