இரண்டே நாட்களில் சளி, இருமல்,காய்ச்சல்,மூச்சுத்திணறல் குணமாக எளிய முறை வீட்டுவைத்தியம்!( Cough, cold fever, asthma)

Cold,Cough, Fever and Asthma - Home Remedies|சளி,இருமல்,காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் குணமாக எளிய முறை வீட்டுவைத்தியம் 

சளி,இருமல்,காய்ச்சல்,மற்றும் மூச்சுத்திணறல் போன்றவைகளை குணப்படுத்த இந்த கசாயம் பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1) மிளகு - 10
2) கிராம்பு - 4
3) கற்பூரவள்ளி இலை - (4 இலை)
4) துளசி - (10 முதல் 15 இலை)
5) மஞ்சள்தூள் - (ஒரு சிட்டிகை)
6) தேன் - (2 ஸ்பூன் அளவு)

செய்முறை 

எடுத்துக்கொண்ட 10 மிளகு,4 கிராம்பை நன்றாக நசுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1½ ஒன்றரை டம்ளர் அளவில் தண்ணீரை ஊற்றி, நான்கு கற்பூரவள்ளி இலை, பத்து துளசி இலை,நசுக்கி வைத்துள்ள மிளகு, கிராம்பு ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பாத்திரத்தை இறக்கும் சமயத்தில் கால் சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கி விட்டு சிறிது நேரத்தில் பாத்திரத்தை இறக்கிவிட வேண்டும்.

பின்பு குடிக்கும் பதத்தில் நன்கு ஆற விட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வடிகட்டி எடுத்துக்கொண்ட கசாயத்தில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து கொள்ளவும்.

தேன் சேர்க்கும் போது இதன் மருத்துவகுணம் இன்னும் அதிகமாகிறது.

இந்த கசாயத்தை காலை உணவு எடுத்துக்கொள்ளும் 30 நிமிடத்திற்கு முன் பாதி அளவு குடிக்க வேண்டும்.

இரவு தூங்குவதற்கு முன் மீதமுள்ள பாதி கசாயத்தை லேசாக சூடு செய்து குடிக்க வேண்டும்.

இதுமாதிரி தொடர்ந்து இரண்டு நாட்கள் குடித்து வந்தாலே போதுமானது.உங்களுக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத்திணறல்,காய்ச்சல்,இருமல், சளி அனைத்தும் குணமாகும் 

நன்மைகள் 

மிளகு 

* அடுக்கு தும்மல்,இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.
* நோய் எதிர்ப்புசக்தி ஐ அதிகரிக்கும்

கிராம்பு

* இருமலை கட்டுப்படுத்தும். 
* காய்ச்சல், ஜலதோசம் ஆகியவற்றை குணப்படுத்தும்.
* மூச்சுத்திணறலை சரிப்படுத்தும்.

கற்பூரவள்ளி இலை

* சளி, இருமல்,தொண்டை புண்,நோய்த்தொற்று,ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும்.

துளசி 

* நரம்பு கோளாறு, ஞாபக சக்தி இல்லாமை,ஆஸ்துமா,சளி ,இருமல், போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

மஞ்சள் தூள்

* உடம்பில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது.
* நோய் எதிர்ப்புசக்தி மேம்படுத்தும்.
* சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போக்கும்.







Post a Comment

0 Comments