இனி கவலை வேண்டாம்!உடல் எடையை குறைக்க மிகவும் எளிமையான வழி( Weight Loss Tips in Tamil)

How to lose Weight In Easy way?

(உடல் எடையை குறைக்கும் உதவும் எளிய வழிமுறைகள்)

உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்களுக்கு தன்னுடைய உடலில் ஏற்பட்டுள்ள பருமனை குறைக்க,தேவையற்ற கொழுப்புகளை அகற்ற பல்வேறு விதமான சிகிச்சைகளும்,உணவுக்கட்டுப்பாடு (Diet) முறையையும்  Follow செய்து வருகின்றனர்.

கசாயத்தை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் 

* சோம்பு (பெருஞ்சீரகம்)
* கொத்தமல்லி விதைகள்
*  சீரகம் 
*  தேவையான அளவு தண்ணீர்

செய்முறை 

இந்த பானத்தை குடிப்பதற்கு முதல் நாள் இரவில் ஒரு டம்ளர் (Glass) இல் ஒரு ஸ்பூன் அளவில் சோம்பு,கொத்தமல்லி விதைகள்,சீரகம் ஆகியவற்றை போட்டு முடித்தபின் 200 மில்லி லிட்டர் அளவில் தண்ணீரை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து மூடி வைத்து விடவும்.

முதல் நாள் இரவு முழுவதும் ஊறிய விதைகள் அடங்கிய நீரை அப்படியே வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதை அடுப்பில் வைத்து சுமார் 10 நிமிடம் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

கொதிக்க வைத்த விதைகள் நிறைந்த நீரை வடிகட்டி குடிக்க கூடிய பதத்தில் ஆர விட்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

இப்படி தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இந்த பானத்தை குடித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க முடியும்.

நன்மைகள் 

1) சோம்பு 

 கால்சியம்,மாக்நீசியம்,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,விட்டமின் A,C போன்றவைகள் அடங்கி இருக்கின்றன.

* கால்சியம் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க விடாமல் பாதுகாக்கிறது.

* மாக்நீசியம் தசை வலிமையையும்,நல்ல தூக்கத்தையும் கொடுக்கிறது.

* பாஸ்பரஸ், பற்களுக்கும்,எலும்புகளுக்கும் நல்ல வலிமையை தருகிறது.

* விட்டமின் ஏ மற்றும் சி கண் பார்வையையும்,நோய் எதிர்ப்புசக்தி அதிக படுத்த உதவுகிறது.

2) கொத்தமல்லி விதைகள்


*இதில் விட்டமின் K,C,P மற்றும்  நார்ச்சத்து அடங்கி இருக்கிறது.

*இந்த நார்ச்சத்து உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

3) சீரகம் 

* இது மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.

*செரிமானத்தை மேம்படுத்துகிறது.

*உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.














Post a Comment

0 Comments